சென்னை: ஜாமீனில் வெளியே வந்த ரவுடி... கத்திகளுடன் துரத்திய கும்பல்!
புழல்,புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த ரவுடியை சினிமா பாணியில் காரை விரட்டிச் சென்று கொலை செய்ய முயன்ற கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையை அடுத்த
புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த ரவுடியை சினிமா பாணியில் காரை விரட்டிச் சென்று கொலை செய்ய முயன்ற கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையை அடுத்த ராஜமங்கலம் 8-வது தெருவைச் சேர்ந்தவர் மாசி என்ற மாசிலாமணி (வயது 38). ரவுடியான இவரை அடிதடி வழக்கு தொடர்பாக ராஜமங்கலம் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இவருக்கு நேற்று முன்தினம் ஜாமீன் கிடைத்தது. இதையடுத்து மாலையில் புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த மாசிலாமணியை அழைத்துச் செல்வதற்காக அவரது நண்பர்கள் 4 பேர் அங்கு இருந்தனர். அப்போது மாசிலாமணியை தீர்த்துக்கட்ட ஒரு கும்பலும் அங்கு தயாராக காத்திருந்தது.
மாசிலாமணி காரில் ஏறியதும். கார் புறப்பட்டு சென்னைக்கு கிளம்பியது. உடனே 2 மோட்டார் சைக்கிள்களில் 5 பேர் கொண்ட கும்பல் காரை பின்தொடர்ந்து விரட்டிச் சென்றது. திடீரென அந்த கும்பல், சினிமா பாணியில் காரை வழிமறித்து. கத்திகளால் கண்ணாடியை வெட்டி சேதப்படுத்தியது.

