670 சுற்றுலா பயணிகளுடன் உலகை சுற்றிவர புறப்பட்ட சொகுசு கப்பல்: டிக்கெட் கட்டணம் எவ்வளவு தெரியுமா?
ரோம், 670 சுற்றுலா பயணிகளுடன் உலகை சுற்றிவர சொகுசு கப்பல் ஒன்று இத்தாலி தலைநகர் ரோமில் இருந்து புறப்பட்டுள்ளது. நீர்வழிச் சுற்றுலாபறவைகள் பலவிதம் என்பதுபோல், பய
பறவைகள் பலவிதம் என்பதுபோல், பயணங்களிலும் பலவகைகள் உள்ளன. அந்த வகையில், நில வழித்தடங்களில் உள்ள போக்குவரத்து வசதிகளை அனைவரும் அனுபவித்து இருப்பார்கள். ஆனால், நீர்வழித்தடங்களில் உள்ள போக்குவரத்து வசதிகளை அனுபவித்தவர்கள் மிகவும் குறைவு.
எல்லோரும் கடற்கரையில் இருந்து ஆழ்கடலில் செல்லும் கப்பல்களை கண்டு ரசித்து இருப்போம். ஆனால், அந்த கப்பலில் இருந்து கடற்கரையில் உள்ள நகரை கண்டுரசிப்பது எவ்வளவு அழகு தெரியுமா?. அதுவும் இரவு நேரத்தில் அந்த நகரம் மின்னொளியில் ஜொலிப்பதை பார்ப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
இதுபோன்ற சாகச சுற்றுலா விரும்பிகளை குறிவைத்து, எக்ஸ்ப்ளோரேஷன்ஸ் பை நார்வேஜியன் என்ற நிறுவனம் நீண்டகால சுற்றுலாவுக்கு அழைத்து செல்ல முன்வந்தது.

