விருதுநகர் டீன் பதவியேற்பு
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை டீன் ஆக இருந்த ஜெயசிங், கோவை இ.எஸ்.ஐ., அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை டீன் ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
மேலும் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை டீன் அமுதா ராணி, விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையின் டீன் ஆக நியமிக்கப்பட்டார். இவர் நேற்று மாலை விருதுநகர் அரசு மருத்துவ கல்லுாரியில் டீன் ஆக பதவி ஏற்றுக்கொண்டார்.


