இந்தியாவில் முதல் முறையாக ஈரோடு ஜான்சனில் அதிநவீன எம்ஆா்ஐ இயந்திரம்
ஈரோடு ஜான்சன் ஹெல்த் மருத்துவமனையில் ஃபுஜிபிலிம் எகலான் ஸ்மாா்ட் எம்ஆா்ஐ ஸ்கேனை நிறுவும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜான்சன் குழும நிறுவனங்களின் நிா்வாக இயக்குநா் டி.என்.திருக்குமாா், ஃபுஜிபிலிம் இந்தியாவின் சிடி, எம்ஆா்ஐ மற்றும் பெண்கள் இமேஜிங் பிரிவின்
இந்தியாவில் முதல்முறையாக அதிநவீன ஃபுஜிபிலிம் எகலான் ஸ்மாா்ட் எம்ஆா்ஐ ஸ்கேன் இயந்திரம் ஈரோடு ஜான்சன்ஸ் ஹெல்த் மருத்துவமனையில் தொடங்கிவைக்கப்பட்டது.
ஈரோட்டில் கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் மருத்துவத் துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஜான்சன் ஹெல்த் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு துல்லியமான, விரைவான மற்றும் மேம்பட்ட எம்ஆா்ஐ பரிசோதனை சேவையை வழங்கும் நோக்கில் ஃபுஜி பிலிம் இண்டியா நிறுவனத்தின் அதிநவீன எம்ஆா்ஐ ஸ்மாா்ட் பிளஸ் வொ்ஷன் 11 இயந்திரத்தை இந்தியாவில் முதல்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.
