கைது செய்யப்படும் அனைவரும் குற்றவாளிகள் அல்லர்! நீதியும் நியாயமும் - 3
ஒருவரின் உடற் சுதந்திரத்தை உரிய அதிகாரம் பெற்றவர் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதைக் கைது (Arrest) என சட்டம் வரையறை செய்கிறது.
கடந்த ஆகஸ்டு மாதம் 4 ஆம் தேதி; காலை 8 மணி. தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டில் தஞ்சாவூர் காவல்துறையினரும் கூடுதலாக சென்னை காவல்துறை அதிகாரிகளும் குவிக்கப்பட்டிருந்தனர். அவரைக் கைதாகக் கேட்டுக்கொள்கிறார்கள். அவர் உடனடியாகக் கைதாகவில்லை. தன்னுடைய வழக்கறிஞர்களோடு விவாதிக்கிறார். தலைவர்களின் கண்டன அறிக்கைகள் வெளியாகின்றன.
சென்னை உயர் நீதிமன்றம் தலையீடு செய்கிறது. 3 மணி நேரம் காத்திருந்து; அவரை விசாரணைக்காகத் தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்கின்றனர். இறுதியில், செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்படுகிறார். விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்படுகிறார். தன்னுடைய மாண்பிற்கும் சுயமரியாதைக்கும் காவல் துறையினரால் எந்தவகையிலும் கேடு நேர்ந்திடக் கூடாது என்பதில் உதயநிதி ஸ்டாலின் கவனமாக இருந்திருக்கிறார்.





