இந்தியாவின் அணு ஆயுத களஞ்சியத்தில் 190 குண்டுகள் இருப்பதாக மதிப்பீடு
புதுடெல்லி,அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு(FAS) சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவின் அணு ஆயுதக் களஞ்சியத்தில் 190 போர் குண்டுகள் இருப்பதாக மதிப
அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு(FAS) சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவின் அணு ஆயுதக் களஞ்சியத்தில் 190 போர் குண்டுகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், உற்பத்தியில் உள்ள புதிய ஏவுகணைகளுக்கான 30 கூடுதல் குண்டுகளும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் தகவல்கள், அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட தரவுகள் மற்றும் வணிக செயற்கைக்கோள் படங்கள் ஆகியவற்றின் கலவையான பகுப்பாய்வுகளில் இருந்து அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு இந்த மதிப்பீடுகளை பெற்றுள்ளது.
இது குறித்து அந்த கூட்டமைப்பின் திட்ட இயக்குநர் ஹான்ஸ் கிறிஸ்டென்சன் எழுதிய கட்டுரையில், “அணு ஆயுதங்களை ஏவக்கூடிய படை அமைப்பு மற்றும் திறன் தொடர்பான பொதுத் தகவல்களின் அடிப்படையில், இந்தியா சுமார் 190 அணு ஆயுத போர் குண்டுகளை உற்பத்தி செய்திருக்கலாம் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.




