ஹாங்காங்கில் நூடுல்ஸ் பார்சலுக்குள் உயிருடன் துடித்த எலிக்குட்டி!
பெய்ஜிங்,சீனாவின் ஹாங்காங் பகுதியில் பார்சல் வாங்கப்பட்ட நூடுல்ஸ் உணவிற்குள், உயிருடன் கூடிய சிறிய எலிக்குட்டி ஒன்று துடித்துக் கொண்டிருந்த சம்பவம் பெரும் பரபரப
சீனாவின் ஹாங்காங் பகுதியில் பார்சல் வாங்கப்பட்ட நூடுல்ஸ் உணவிற்குள், உயிருடன் கூடிய சிறிய எலிக்குட்டி ஒன்று துடித்துக் கொண்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீன நாட்டின் ஹாங்காங்கின் குவாய் சங் பகுதியில் 'வா ஜெர்' என்ற உணவகம் செய்பட்டு வருகிறது. இந்த உணவகத்தை மைக் என்பவர் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று (திங்கட்கிழமை) மதியம் பெண் ஒருவர் சாடே பீப் நூடுல்ஸ், ஹாம் ஆம்லெட் மற்றும் ஒரு பானம் ஆகியவை அடங்கிய ஒரு செட் உணவு பார்சல் வாங்கியுள்ளார். இதையடுத்து அவர் வீட்டிற்குச் சென்று அந்த உணவை சாப்பிடுவதற்காக டப்பாவைத் திறந்தார்.
டப்பாவில் அடர்ந்த சாஸ் மற்றும் நூடுல்ஸ் துண்டுகளுக்கு நடுவே, இன்னும் ரோமங்கள் கூட முளைக்காத, புதிதாகப் பிறந்த சிறிய எலிக்குட்டி ஒன்று உயிருடன் கை, கால்களை அசைத்தபடி அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண், உடனடியாக அந்த அதிர்ச்சி காட்சியைத் தனது மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
