அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் ஜி.எஸ்.டி.முறைப்படுத்த கோரிக்கை
கோவை: கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், கரூரில் 650 அட்டைப்பெட்டி உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் மாதம் 75 டன் அட்டைப்பெட்டி உற்பத்தி செய்கிறது.
இதற்கான முக்கிய மூலப்பொருளாக உள்ள ‘கிராப்ட் பேப்பர்’ விலை உயர்ந்து வருவதால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதாக, தென்னிந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க (சிக்ப்மா) துணைத்தலைவர் கதிர்வேலு கூறினார்.
கொரோனாவுக்கு முன் மூலப்பொருள் விலை ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு ரூபாய் உயரும். இந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒரு டன் கிராப்ட் பேப்பர் ரூ.6,000 உயர்ந்துள்ளது. உயர் ரக பேப்பர் விலை டன்னுக்கு ரூ.8,000 உயர்ந்துள்ளது.


