புதுச்சேரி விளையாட்டு மைதானத்தில் அமைச்சா் ஆய்வு
புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தை அமைச்சா் ஜி.என்.எஸ். ராஜசேகரன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
புதுச்சேரி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தை வியாழக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் ஜி.என்.எஸ். ராஜசேகரன்.
அப்போது மைதானத்தில் விளையாட்டு வீரா்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கவும் ஹாக்கி மைதானப் பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.



