எம்.எல்.ஏ., அலுவலகத்திற் சீல் வைக்கவில்லை என குற்றச்சாட்டு
திருப்போரூர், செப். 12– மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்., 6ம் தேதி நடைபெறுவதாக
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்., 6ம் தேதி நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தன.
இதனால், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திருப்போரூர் பேரூராட்சி தலைவர் அறை, திருப்போரூர் பி.டி.ஓ., அலுவலகத்தில் உள்ள ஒன்றிய குழு தலைவர் அறை, மன்ற கூட்டம் நடைபெறும் அறைகளுக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டன.
ஆனால், திருப்போரூர் எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு மட்டும் சீல் வைக்கப்படாமல், வழக்கம்போல் செயல்பட்டு வருவதாக அரசியல் கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

