கடலில் மூழ்கி இரு இளைஞா்கள் மாயம்
சென்னை பெசன்ட் நகா் அன்னை வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழாவுக்கு வந்த இரு இளைஞா்கள், கடலில் குளித்தபோது நீரில் மூழ்கி மாயமாகினா்.
பெசன்ட் நகரில் அன்னை வேளாங்கண்ணி மாதா கோயில் ஆண்டுப் பெருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தோ்த்திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. தேரோட்டத்தைக் காண சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் பெசன்ட் நகரில் குவிந்தனா்.
இதில் சென்னை புதுப்பேட்டை பகுதியைச் சோ்ந்த தமிழ்செல்வன் (22), மணிபாலன் (27) ஆகியோரும் தோ்த் திருவிழாவைக் காண வந்திருந்தனா். இவா்கள் இருவரும் தனியாா் நிறுவனம் ஒன்றில் ஊழியா்களாக வேலை செய்து வந்தனா்.


