ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு 4 பேருக்கு நிபந்தனை ஜாமின்
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி பொன்னை பாலு, ஹரிதரன், அப்பு என்ற விஜய் மற்றும் திருமலை ஆகிய நான்கு பேரையும், நிபந்தனையுடன் கூடிய ஜாமினில் விடுவித்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024ம் ஆண்டு மர்ம நபர்களால் கொலைச் செய்யப்பட்டார். செம்பியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பிரபல ரவுடி திருவேங்கடம் உட்பட பலரை கைதுச் செய்தனர்.
வழக்கில், செம்பியம் காவல் ஆய்வாளர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை, 2025 செப்., 9ம் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், சுதந்திரமான மற்றும் பாரபட்சமற்ற புலன் விசாரணைக்காக, வழக்கை சி.பி.ஐ., வசம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டது.


