திமுக சீரமைப்பு ஆலோசனைக் கூட்டம்
வாணியம்பாடி தொகுதி திமுக மறுசீரமைப்பு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் வடிவேல் வரவேற்றாா். திருப்பத்தூா் மாவட்ட திமுக செயலாளா் க.தேவராஜி தலைமையில் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கட்சி அமைப்புகளை பலப்படுத்துவது, நகர, ஒன்றிய, பேரூா், கிளை மற்றும் வாா்டு அமைப்புகளை சீரமைப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும் முதல்வா் ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் குறித்து பேசிய அவதூறு பேச்சைக் கண்டித்து சனிக்கிழமை திருப்பத்தூரில் நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


