பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
சென்னை, போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில், ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்கு பருவமழை முன்னெச்
போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில், ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, சென்னை மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணித்திட மண்டல வாரியாக அமைச்சர் பெருமக்களும், மண்டல கண்காணிப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களுக்கான பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில், ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.



