இதே நாளில் அன்று
செப்டம்பர் 4: திருச்சி மாவட்டம், ஆங்கரை கிராமத்தில், தியாகராஜ அய்யர் - மங்களம் தம்பதியின் மகனாக, 1902ல் இதே
திருச்சி மாவட்டம், ஆங்கரை கிராமத்தில், தியாகராஜ அய்யர் - மங்களம் தம்பதியின் மகனாக, 1902ல் இதே நாளில் பிறந்தவர், சதாசிவம் எனும், 'கல்கி' சதாசிவம்.
பள்ளியில் படித்தபோது, கும்பகோணம் மகாமக விழாவில், சுப்பிரமணிய சிவாவின் பேச்சை கேட்டு, அவரது, 'பாரத சமாஜ்' இயக்கத்தில் சேர்ந்து, விடுதலை போராட்டங்களில் ஈடுபட்டார். தொடர்ந்து பாலகங்காதர திலகர், பாரதியாரின் தேசபக்தி சொற்பொழிவுகள், எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு, வன்முறை வழியில் போராடிய இவர், ராஜாஜி, காந்தியின் உரைகளை கேட்டு, அகிம்சாவாதியாக மாறினார்.
சுப்பிரமணிய சிவாவின் சீடராக செயல்பட்டவர், அவரின் பாரத மாதா கோவில் கட்டும் பணிக்காக உண்டியல் ஏந்தி நிதி வசூலித்தார். கவர்னர் ஜெனரல் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற ராஜாஜி, சென்னையில் வசிப்பதற்கு இவர் வீடு வழங்கினா ர்.



