‘த.வெ.க. அரசின் செயல்பாடு எப்படி உள்ளது?’ - லால்குடி எம்.எல்.ஏ. லீமா ரோஸ் பதில்
சிவகங்கை,சிவகங்கை மாவட்டத்தில், லால்குடி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. லீமா ரோஸ் மார்ட்டின் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் த.வெ.க. அரசி
சிவகங்கை மாவட்டத்தில், லால்குடி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. லீமா ரோஸ் மார்ட்டின் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் த.வெ.க. அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது;-
“த.வெ.க. ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பிறகு நிறைய திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்கள். லால்குடி தொகுதியில் உள்ள மாமன்னர் ராஜராஜசோழன் கட்டிய 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலை புனரமைக்க வேண்டும் என்று நான் கோரிக்கை விடுத்திருந்தேன். அவர்கள் 1 கோடி அல்லது 2 கோடி ஒதுக்குவார்கள் என்று நினைத்தேன். ஆனால் கோவில்களை புனரமைக்க மொத்தமாக 125 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறார்கள்.
அதே போல் காவல்துறையினருக்கு சம்பள உயர்வு, காவல்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் முன்வைத்துள்ளோம். எங்கள் கோரிக்கைகளை ஓரளவு நிறைவேற்றிக் கொண்டுதான் வருகிறார்கள்.



