பழனி மலைகளில் வரலாற்றுப் பொக்கிஷம்! 2,000 ஆண்டுகள் பழமையான இடுகாட்டில் ஆய்வு
திண்டுக்கல்,திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைப்பகுதியில் உள்ள குண்டாடி (மாச்சூர்) என்ற இடத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான இடுகாடு அமைந்துள்ளது. இந்த இடத்தில் அக
திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைப்பகுதியில் உள்ள குண்டாடி (மாச்சூர்) என்ற இடத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான இடுகாடு அமைந்துள்ளது. இந்த இடத்தில் அகழாய்வு செய்து ஆராய்ச்சி மேற்கொள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி.) மும்பை சார்பில் இந்திய தொல்லியல் ஆய்வகத்திடம் அனுமதி கோரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நிபுணர் குழுவின் ஆய்வுக்குப் பிறகு கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி அகழாய்வுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதன்படி, ஐ.ஐ.டி. மும்பை சார்பில் 5 மீட்டர் நீளம், 5 மீட்டர் அகலம் கொண்ட மொத்தம் 25 சதுர மீட்டர் பரப்பளவில் மட்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஆய்வுக்கு ‘தென்னிந்திய இடுகாடுகளின் நிலப்பரப்பு’ என பெயரிடப்பட்டுள்ளது.



