”பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்” – தவாக வேல்முருகன்
வேல்முருகன், பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், “தேர்தல் வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்றுவாரா? இரவு பகலாக விவசாயிகள் போராடுவது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி சமயபுரத்தில் விவசாயிகள், பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற முதன்மையான கோரிக்கையை முன்வைத்து இரவு பகலாகத் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் பிரச்சினை பயிர்க்கடனோடு மட்டும் முடிந்துவிடவில்லை.





