மாநில நீச்சல் போட்டி
மதுரை: சேலத்தில் நடந்த மாநில நீச்சல் போட்டியில் மதுரை வேலம்மாள் நீச்சல் அகாடமி மாணவிகள் வெற்றி பெற்றனர். 12 வயது 100 மீட்டர் பட்டர்பிளை, பேக் ஸ்ட்ரோக் பிரிவுகளில் இன்பா தங்கப்பதக்கம், 200 மீட்டர் ஐ.எம். பிரிவில் வெள்ளி, 100 மீட்டர் பிரெஸ்ட் ஸ்ட்ரோக், 50 மீட்டர் ப்ரீஸ்டைல் பிரிவில் வெண்கலம் வென்றார்.
50 மீட்டர் ப்ரீஸ்டைல், 100 மீட்டர் பிரெஸ்ட் ஸ்ட்ரோக், 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவுகளில் வைஷ்ணவி வெள்ளிப்பதக்கம், 100 மீட்டர் பட்டர்பிளை, 100 மீட்டர் ப்ரீஸ்டைல் பிரிவில் வெண்கலம் வென்றார்.

