வாழ்வில் பிரளயமே வந்தாலும் கவலையில்லை; அபிஷேகத் தேனை உறிஞ்சும் இந்த விநாயகர் சந்நிதிக்கு வாருங்கள்
விநாயகர் சதுர்த்தியின்போது விடிய விடிய இந்தப் பிள்ளையாருக்குத் தேனபிஷேகம் நடைபெறும். லிட்டர் லிட்டராக, தேனை ஊற்றி அபிஷேகம் செய்வார்கள். ஆனால் எவ்வளவு ஊற்றினாலும் அதில் ஒரு துளிக்கூடக் கீழே வழியாது. | thirupurambiyam pralayam kaatha vinayagar
விநாயகர் சதுர்த்தியின்போது விடிய விடிய இந்தப் பிள்ளையாருக்கு தேனபிஷேகம் நடைபெறும். லிட்டர் லிட்டராக, தேனை ஊற்றி அபிஷேகம் செய்வார்கள். ஆனால் எவ்வளவு ஊற்றினாலும் அதில் ஒரு துளிக்கூடக் கீழே வழியாது.
கும்பகோணத்துக்கு வடமேற்கில் சுமார் 10 கி.மீ. தொலைவில், மண்ணியாற்றங்கரையில் அமைந்துள்ளது திருப்புறம்பியம். வரலாற்றுச் சிறப்பு மிக்கது இந்தத் தலம். இங்கு நடந்த போரில் முதலாம் ஆதித்த சோழன் வெற்றி பெற்று சோழ சாம்ராஜ்யத்தை நிறுவினான்.
இங்கே சோழர்கள் திருப்பணி செய்த ஆலயம் ஒன்று உண்டு. மிகவும் பழமையும் பெருமையும் வாய்ந்த இந்த ஆலயத்தில் இறைவன் சாட்சிநாதராக அருள்பாலிக்கிறார். மேலும் இந்த ஆலயத்தில் அருளும் விநாயகப்பெருமான் பல்வேறு சிறப்புகளை உடையவர். வாருங்கள் அவர் குறித்த அற்புதத் தகவல்களைக் காண்போம்.


