கூலி தொழிலாளியை தாக்கியவர் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மதுவால் ஏற்பட்ட தகராறில் கூலி தொழிலாளியை தாக்கியவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த சித்திரைபாளையம் சேர்ந்த வீரப்பன் மகன் சத்தியமூர்த்தி,46; கூலி தொழிலாளி. இவரும், சங்கராபுரம் அடுத்த க.செல்லம்பட்டு கிராமத்தை சேர்ந்த தேவராஜ் மகன் கண்ணன் என்பவரும் கள்ளக்குறிச்சி அம்மன் நகரில் தங்கி குடிநீர் குழாய் பதிக்கும் வேலை செய்து வருகின்றனர்.
கடந்த 13 ம் தேதி மாலை 5.30 மணிக்கு பொதுப்பணத்தில் வாங்கி வைத்திருந்த சத்தியமூர்த்தியின் குவார்ட்டர் மதுவை கண்ணன் குடித்துள்ளார். இது குறித்து சத்தியமூர்த்தி கேட்டதால் இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது.

