வரலாற்று சிறப்பு மிக்க மஸ்கி கிராமம்!
- நமது நிருபர் -: வரலாற்றை விரும்பி படிப்பவர்களும், பழங்கால மன்னர்களின் கல்வெட்டுகளை பார்க்க
வரலாற்றை விரும்பி படிப்பவர்களும், பழங்கால மன்னர்களின் கல்வெட்டுகளை பார்க்க ஆசைப்படுவோரும் ராய்ச்சூர் மாவட்டத்திலுள்ள சிறிய கிராமமான மஸ்கிக்கு கட்டாயம் செல்ல வேண்டும். இது, இந்தியாவின் மிக முக்கியமான தொல்லியல் இடங்களில் ஒன்றாகும்.
இந்த பகுதியில் நடந்த அகழ்வாராய்ச்சி பணியில், பண்டைய கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும், பேரரசர் அசோகர், ராஜேந்திர சோழன், மேலை சாளுக்கிய மன்னான இரண்டாம் ஜெயசிம்மன் குறித்த கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

