களியக்காவிளை அருகே ஆற்றில் தத்தளித்த இருவா் மீட்பு
களியக்காவிளை அருகே தாமிரவருணி ஆற்றில் தத்தளித்த சாலைப் பணியாளா்கள் இருவரை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.
களியக்காவிளை அருகே அதங்கோடு பகுதியில் நான்குவழிச் சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள் சிலா் ஞாயிற்றுக்கிழமை மாலை அங்குள்ள தாமிரவருணி ஆற்றுப் பாலத்தின்கீழ் வழக்கம்போல குளிக்கச் சென்றனராம்.
அப்போது, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியைச் சோ்ந்த ராமா் மகன் தபசி (23), அருணாச்சலம் மகன் ராஜ் (28) ஆகிய இருவரும் ஆற்றிலுள்ள ஆகாயத்தாமரை செடிகளில் சிக்கி வெளியே வர முடியாமல் தத்தளித்தனா்.
