சபரிமலையில் 70 லட்சம் டின் அரவணை இருப்பு வைக்க முதல்-மந்திரி உத்தரவு
திருவனந்தபுரம்சபரிமலையில் 70 லட்சம் டின் அரவணை பிரசாதம் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என முதல்-மந்திரி வி.டி.சதீசன் கூறினார்.சபரிமலையில் நடப்பு ம
சபரிமலையில் 70 லட்சம் டின் அரவணை பிரசாதம் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என முதல்-மந்திரி வி.டி.சதீசன் கூறினார்.
சபரிமலையில் நடப்பு மண்டல மகரவிளக்கு சீசன் வரும் நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. இதனையொட்டி நேற்று திருவனந்தபுரத்தில் முதல்-மந்திரி வி.டி.சதீசன் தலைமையில் உயர் மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் அவர் கூறும்போது, சபரிமலை சன்னிதானத்தில் அனைத்து துறைகளின் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை தொடங்கப்படும்.
சபரிமலையில் பல மணி நேரம் காத்திருக்கும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும். பொதுப்பணித்துறை சார்பில் சீசனுக்கு முன்னதாக ரூ.551 கோடியில் சாலை மற்றும் கட்டுமான பணிகள் நிறைவேற்றப்படும்.

