நெரிசலில் தத்தளிக்கும் ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை துறையினர் அலட்சியம்
ஊத்துக்கோட்டை: மத்திய – மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், சாலையோர ஆக்கிரமிப்புகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பரிதவித்து வருகின்றனர்.
சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூர் – சத்தியவேடு நெடுஞ்சாலையை இணைக்கும் இடமாக ஊத்துக்கோட்டை பேரூராட்சி உள்ளது. இங்கு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன.
சுற்றியுள்ள, 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தங்களின் அத்தியாவசிய தேவைக்கு ஊத்துக்கோட்டை சென்று வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பில் உள்ள இச்சாலை வழியாக தினமும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன.



