விளைச்சல் பாதிப்பு விற்பனைக்கு வந்த பெங்களூரூ வெற்றிலை
திருப்புவனம், செப். 14-– திருப்புவனத்தில் கடும் கோடை வெயில் காரணமாக விளைச்சல் பாதித்ததால் பெங்களுரூவில்
திருப்புவனத்தில் கடும் கோடை வெயில் காரணமாக விளைச்சல் பாதித்ததால் பெங்களுரூவில் இருந்து வெற்றிலை விற்பனைக்கு வந்துள்ளது.
திருப்புவனம் தாலுகாவில் கலியாந்தூர், நயினார்பேட்டை, வெள்ளக்கரை, புதூர் , நெல்முடிகரை பகுதியில் அதிகளவில் வெற்றிலை பயிரிடப்பட்டு வருகிறது. மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் வெற்றிலை சுருங்கி விளைச்சல் பாதித்துள்ளன. இங்கிருந்து சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, பரமக்குடி, ராமநாதபுரம் பகுதிக்கு தினமும் 2 ஆயிரம் கிலோ வெற்றிலை விற்பனைக்கு சென்றது. தற்போது கோடைவெயிலால் தினமும் 300 கிலோ மட்டுமே விற்பனைக்கு வருகிறது. இதனால் பெங்களூரூவில் இருந்து தினமும் 1,000 கிலோ வரை வரவழைத்து, கிலோ ரூ.400 க்கு விற்று வருகின்றனர். இருப்பினும் திருப்புவனம் வெற்றிலை போல் பசுமை தன்மை அதிகம் பிற மாநில வெற்றிலைக்கு இருக்காது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


