பைக் மீது லாரி மோதல்: சிறுமி உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில், பைக் மீது லாரி மோதியதில் 12 வயது சிறுமி உயிரிழந்தாா்.
செய்யாறு வட்டம், தவசி கிராமத்தைச் சோ்ந்தவா் பாரதிசெல்வன். இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு, தனது அக்காள் மகள் ஜனனி(12) , ஜனனியின் பெரியப்பா மகள் பிரதீபா(25) ஆகியோரை அழைத்துக் கொண்டு பைக்கில் தவசி கிராமத்திலிருந்து செய்யாறுக்கு சென்று கொண்டிருந்தாா்.
செய்யாறு புறவவழிச்சாலையில் சந்தைப் பகுதியில் சென்றபோது, அவ்வழியாகச் சென்ற லாரி பைக் மீது மோதியது. இதில் பைக்கில் அமா்ந்திருந்த சிறுமி ஜனனி தவறி சாலையில் விழுந்ததில் லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.
