புதிய கியா சோரென்டோ அறிமுகம்
கோவை: கியா இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட டீலரான பிரசன்னா கியா சார்பில் புதிய கியா சோரென்டோ தனியார் ஓட்டலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அமைச்சர் சம்பத்குமார், சிங்காநல்லுார் எம்.எல்.ஏ., ஸ்ரீ கிரி பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முதல் ஹைப்ரிட் மாடலாக அறிமுகமாகியுள்ள சோரென்டோ ரூ.27.99 லட்சம் முதல் உள்ளது. ஸ்மார்ட்ஸ்ட்ரீம் 1.6 டர்போ ஜி.டி.ஐ., ஹைப்ரிட் பவர்டிரெயின், 12.3 இன்ச் எச்.டி., டிஸ்ப்ளே, பனோரமிக் சன்ரூப், போஸ் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், கியா கனெக்ட் 2.0 உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.
பிரசன்னா குழும இணை நிர்வாக இயக்குநர் அனிஷ் பிரசன்னா கூறுகையில்,‘‘ புதிய கியா சோரென்டோ அறிமுகம் செய்வது பிரசன்னா கியாவுக்கு பெருமைமிக்க மைல்கல். சோரென்டோவின் ஹைப்ரிட் தொழில்நுட்பம், பிரீமியம் வசதி மற்றும் மேம்பட்ட அம்சங்களை வாடிக்கையாளர்கள் ஷோரூம்களில் நேரடியாக அறிந்து கொள்ளலாம்,’’ என்றார்.
கியா இந்தியாவின் மண்டல விற்பனை மேலாளர் கவுரவ் குமார், பிரசன்னா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் செந்தில் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
