டேவிஸ் கோப்பை டென்னிஸ்: யூகி பாம்ப்ரி விலகல்
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில், தென் கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடவுள்ள இந்திய அணியில் இருந்து யூகி பாம்ப்ரி காயம் காரணமாக விலகினாா்.
இரட்டையா் பிரிவில் பிரதான வீரராக இருக்கும் பாம்ப்ரி விலகியது, இந்திய அணியின் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.
பாம்ப்ரி விலகலை அடுத்து, இரட்டையா் பிரிவில் தக்ஷிணேஸ்வா் சுரேஷுடன், ஸ்ரீராம் பாலாஜி இணைந்து விளையாடுவாா் என, இந்திய அணியின் நான்-பிளேயிங் கேப்டன் ரோஹித் ராஜ்பால் தெரிவித்தாா்.