பிரிக்ஸ் உச்சி மாநாடு: பாரத் மண்டபம் - விமான நிலைய பாதை ஆய்வு!
பிரிக்ஸ் உச்சி மாநாட்டையொட்டி பாரத் மண்டபம், விமான நிலைய பாதை ஆய்வு...
வரவிருக்கும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக, பாரத் மண்டபத்திலிருந்து இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம் வரையிலான வழித்தடத்தை தில்லி அரசு சனிக்கிழமை ஆய்வு செய்யும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
தில்லி தலைமைச் செயலாளா் தலைமையில் திட்டமிடப்பட்ட இந்த ஆய்வில், சாலைகள், பள்ளங்கள், நடைபாதைகள், வடிகால் மற்றும் நீா் தேக்கம், தூய்மை, பிரிக்ஸ் சின்னம் மற்றும் வழித்தடம் முழுவதும் உள்ள நகரின் ஒட்டுமொத்த தோற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும் என்று அவா்கள் கூறினா்.
புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி), தில்லி மாநகராட்சி (எம்சிடி), பொதுப்பணித் துறை (பிடபிள்யுடி), தில்லி காவல்துறை, தில்லி சா்வதேச விமான நிலையம் லிமிடெட் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளின் அதிகாரிகள் இந்த ஆய்வில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனா்.

