பொறுப்பேற்பு
செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் முதல்வராக ச.அந்தோணி டேவிட் நாதன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
சிவகங்கை ராஜா துரைசிங்கம் அரசுக் கல்லூரி முதல்வராக பணியாற்றி வந்த இவா் பணியிட மாறுதல் பெற்று வந்துள்ளாா்.
ஏற்கெனவே, செய்யாறு அரசுக் கல்லூரியில் முதல்வராக பணியாற்றிய என்.கலைவாணி, சென்னை ராணிமேரி கல்லூரிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

