சச்சினை முந்திய கில்... ஒரே டெஸ்டில் அதிக ரன்கள் குவித்த டாப்-10 இந்திய வீரர்கள்
மும்பை,இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரே டெஸ்டில் அதிக ரன்கள் குவித்த டாப்-10 இந்திய வீரர்களை தற்போது காண்போம். கில் முதலிடம்இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரே டெஸ
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரே டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்டர்கள் பட்டியலில் சுப்மன் கில் முதலிடத்தில் உள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் அபாரமாக விளையாடிய கில், முதல் இன்னிங்சில் 269 ரன்களும், 2-வது இன்னிங்சில் 161 ரன்களும் விளாசினார். இதன் மூலம் ஒரே டெஸ்டில் மொத்தம் 430 ரன்கள் குவித்து இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
இதற்கு முன்பு இந்த பட்டியலில் 344 ரன்களுடன் சுனில் கவாஸ்கர் முதலிடத்தில் இருந்தார். 1971-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போர்ட் ஆப் ஸ்பெயின் டெஸ்டில் கவாஸ்கர் முதல் இன்னிங்சில் 124 ரன்களும், 2-வது இன்னிங்சில் 220 ரன்களும் சேர்த்து மொத்தம் 344 ரன்கள் குவித்திருந்தார். சுமார் 54 ஆண்டுகளாக நீடித்த இந்த சாதனையை சுப்மன் கில் முறியடித்துள்ளார்.

