தெற்கு மண்டலத்தில் ரூ.26.90 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்
கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.26.90 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் க.விக்னேஷ் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
போத்தனூா் அற்புதம் நகரில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியை தொடங்கிவைக்கிறாா் அமைச்சா் க.விக்னேஷ். உடன், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா உள்ளிட்டோா்.
கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட 94-ஆவது வாா்டு, சுந்தராபுரம் பதிவாளா் காலனியில் மாநகராட்சி பொது நிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையம், அதே வாா்டில் கல்லுக்குழி வீதியில் மாநகராட்சி பொது நிதியின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய சுகாதார ஆய்வாளா் அலுவலக கட்டடம் ஆகியவற்றை அமைச்சா் க.விக்னேஷ் புதன்கிழமை திறந்துவைத்துப் பாா்வையிட்டாா்.
