'48 லேப்ஸ்; 282.8 கி.மீ கவரேஜ்!' - ரேஸில் அஜித் எத்தனையாவது இடம் பிடித்தார்? - உண்மை என்ன?
அஜித் மூன்றாம் இடம் பிடித்ததாகவும் சில நிறுவனங்கள் 9 ஆம் இடம் பிடித்ததாகவும் இன்னும் சிலர் அஜித்தின் கார் 38 வது இடம் பிடித்ததாகவும் பதிவு செய்திருக்கின்றனர். உண்மையில் அஜித் எத்தனையாவது இடம்தான் பிடித்தார்?
லண்டனின் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடந்த 'Michelin Le Mans Cup' கார் ரேஸ் பந்தயத்தில் நடிகர் அஜித் கலந்து கொண்டிருந்தார். சிறப்பு விருந்தினராக இந்த ரேஸூக்கு வந்த முதல்வர் விஜய், ரேஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார். விஜய்யும் அஜித்தும் கட்டியணைத்து நட்பை பகிர்ந்து கொண்ட புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் பயங்கர வைரல்.
ஆனால், இந்த ரேஸில் அஜித் எத்தனையாவது இடம் பிடித்தார் என்பதில் குழப்பமான தகவல்கள் ஓடிக்கொண்டிருக்கிறது. சில ஊடக நிறுவனங்கள் அஜித் மூன்றாம் இடம் பிடித்ததாகவும் சில நிறுவனங்கள் 9 ஆம் இடம் பிடித்ததாகவும் இன்னும் சிலர் அஜித்தின் கார் 38 வது இடம் பிடித்ததாகவும் பதிவு செய்திருக்கின்றனர். உண்மையில் அஜித் எத்தனையாவது இடம்தான் பிடித்தார்?



