சிறுமி கொலை வழக்கு ஒத்திவைப்பு
காந்திபுரம்: சூலுார் அருகே, 10 வயது சிறுமி , மே 21 ல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் நாகப்பட்டினம் கார்த்திக்,33, தஞ்சாவூர் மோகன்,31, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது, கோவை முதன்மை போக்சோ கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.
வழக்கில் விசாரணை முடிந்ததை தொடர்ந்து, எதிரிகள் இருவரிடம், அரசு தரப்பு சாட்சிகளின் குற்றச்சாட்டு குறித்து கேள்வி கேட்பதற்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் போலீசார் ஆஜர்படுத்தவில்லை. விசாரணை வரும் 22 ம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ரத்தினபுரி: மகேஸ்வரி நகரை சேர்ந்தவர் தீபா. அருகில் உள்ள கடைக்கு வீட்டை பூட்டாமல் கடைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, மாரப்பன் வீதியை சேர்ந்த மணிகண்டன் வீட்டினுள் சென்று, பீரோவில் பொருட்களை தேடியுள்ளார். தீபாவை பார்த்தவுடன் கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடினார். போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.


