கொல்லிமலை, ராசிபுரத்தில் மழை: மாவட்டத்தில் 102.60 மி.மீ., பதிவு
நாமக்கல்:நாமக்கல் மாவட்டத்தில், நேற்று முன்தினம் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. தொடர்ந்து, மதியம், 2:30 மணிக்கு, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலமாக மழை பெய்தது.
குறிப்பாக, கொல்லிமலை, ராசிபுரம், மோகனுார், குமாரபாளையம் ஆகிய இடங்களில், கனமழை பெய்தது. அதனால், வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்து காற்று வீசியது. இது பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை மகிழ்ச்சியடைய செய்தது.நேற்று முன்தினம் காலை, 6:00 முதல், நேற்று அதிகாலை, 6:00 மணி வரை, 24 மணி நேரத்தில், மாவட்டத்தில் பெய்த மழையளவு (மி.மீ.,ல்) பின்வருமாறு:குமாரபாளையம், 12.60, மோகனுார், 10, நாமக்கல், 6, ப.வேலுார், 8, புதுச்சத்திரம், 2, ராசிபுரம், 18, சேந்தமங்கலம், 4.60, திருச்செங்கோடு, 4.40, கலெக்டர் அலுவலகம், 2, கொல்லிமலை, 35 என, மொத்தம், 102.60 மி.மீ., மழை பெய்தது.
