“ஒரு கேட்ச்... ஒரு பொய்!” ஹர்மன்ப்ரீத் பெயரில் வைரலான AI வீடியோ சொல்லும் எச்சரிக்கை!
Viral Harmanpreet Kaur Video is Fake: AI-Generated Clip Sparks Alert / “ஒரு கேட்ச்... ஒரு பொய்!” ஹர்மன்ப்ரீத் பெயரில் வைரலான AI வீடியோ சொல்லும் எச்சரிக்கை!
இந்தக் காட்சி உண்மையான கிரிக்கெட் போட்டியில் நடந்தது அல்ல. AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி வீடியோ இது.
கிரிக்கெட் போட்டியில் இப்படியொரு கேட்ச்சை பார்த்தால், ஒரு நிமிடம் நம்மாலேயே நம்ப முடியாது. ஓடிவரும் வீராங்கனை… திடீரென தலைகீழாகச் அந்தர்பல்டி (backflip ) அடித்து கேட்ச் பிடிக்கிறார். இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி, கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வீராங்கனை ஒருவர் எடுத்த கேட்ச் என்ற தகவலுடன் வீடியோ பலராலும் பகிரப்பட்டது. அதிலும், சிலர் இந்த அசாத்திய கேட்ச்சை ஹர்மன்ப்ரீத் கவுர் பிடித்ததாகக் குறிப்பிட்டனர்.


