போலி லே -அவுட்கள்! தமிழக வணிக ஒழுங்குமுறை ஆணையத்திடம் புகார்: விதிமீறிய புரமோட்டர்கள் மீது நடவடிக்கை பாயுமா?
குன்னுார்: 'நீலகிரியில் அதிகரிக்கும் போலி 'லே--அவுட்கள்' மீது, மனை வணிக ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உரிய அனுமதியின்றி சட்டவிரோத கட்டுமானங்கள் அதிகரித்து வருகின்றன. அதில், வீட்டுமனை திட்டம், ரியல் எஸ்டேட் போன்றவை ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பிற வெளி மாநிலத்தவர்களால் அதிகரித்து வருகிறது.
மாவட்டத்தில் அனுமதியற்ற வீட்டு மனை திட்டங்கள் மற்றும் விதிமீறல்கள் குறித்து கண்டறிய, மாவட்ட கலெக்டரின் உத்தரவின்படி, குன்னுார்- சப் கலெக்டர், மாவட்ட நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர், கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டது.


