பிரிக்ஸ் மாநாடு இந்தியாவுக்கு கிடைத்த பெருமை; ப.சிதம்பரம் Vs சசி தரூர்... காங்கிரஸில் மோதல்
புதுடில்லி: பிரிக்ஸ் மாநாட்டை இந்தியாவில் நடத்துவது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்ரபம் கேள்வி எழுப்பிய நிலையில், சக கட்சி நிர்வாகியும், காங்கிரஸ் எம்பியுமான சசி தரூர் பதிலடி கொடுத்துள்ளார்.
உலக நாடுகளின் கூட்டமைப்புகளில் ஒன்றான பிரிக்ஸ் மாநாடு நாளை முதல் இரு தினங்களுக்கு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா, தென்னாப்ரிக்கா உள்பட பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்தியாவுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த மாநாடு இந்தியாவில் நடப்பதை கவுரவமாக கருதி வரும் நிலையில், பிரிக்ஸ் மாநாட்டினால் இந்தியாவுக்கு என்ன பயன் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் நேற்று கேள்வி எழுப்பியுள்ளார்.

