4 வயதில் நோய்; முடியாது என்ற வார்த்தையை தாண்டி… US Open சாம்பியன்! - அம்மாவுக்கு நன்றி சொன்ன Zverev
Zverev Overcame Childhood Illness to Win US Open 2026, Thanks Mother
வயதில் வந்த நோய் அவரை நிறுத்தவில்லை… “முடியாது” என்ற வார்த்தைகளும் அவரைத் தடுக்கவில்லை. தன் தாய் தந்த தன்னம்பிக்கையை உந்துகோலாக இன்று US Open கோப்பையுடன் நிற்கிறார் Alexander Zverev.
“உன்னால் முடியாது” என்ற வார்த்தைகள் ஒரு குழந்தையின் கனவை முடக்கிவிடலாம். ஆனால், அந்த வார்த்தைகளையே தாண்டி இன்று உலக டென்னிஸின் உச்சத்தைத் தொட்டிருக்கிறார் ஜெர்மனி வீரர் Alexander Zverev.
2026 US Open ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் Ben Shelton-ஐ 6-3, 7-6(2), 5-7, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் Zverev. இது அவருடைய முதல் US Open பட்டமும், இரண்டாவது Grand Slam பட்டமும் ஆகும்.


