சேயோன் திரைப்படத்தில் இணைந்தார் சீமான்!
நடிகர் சிவகார்த்திகேயனின் சேயோன் திரைப்படத்தில் சீமான்...
நாதக தலைவர் சீமான் நடிகர் சிவகார்த்திகேயனின் சேயோன் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் சேயோன் திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கான பணிகளும் தீவிரமடைந்து வருகின்றன.
நாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸும் முக்கிய கதாபாத்திரத்தில் பால சரவணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் மதுரை வாழ்வியல் சார்ந்த படமாக உருவாகிறது.



