12ம் வகுப்புத் தேர்ச்சி போதும்... மத்திய அரசுத் துறைகளில் 2,536 காலியிடங்கள்... விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ்நாட்டில் 8 மையங்கள், ஆந்திரப் பிரதேசத்தில் 11 மையங்கள், தெலங்கானாவில் 4 மையங்கள் மற்றும் புதுச்சேரியில் 1 மையத்தில் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஒருங்கிணைந்த மேல்நிலை (10+2) அளவிலான தேர்வு 2026-க்கான அறிவிக்கையை மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. மத்திய அமைச்சகங்கள், துறைகள், நிறுவனங்களின் பல்வேறு குரூப் சி பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த வெளிப்படையான போட்டித் தேர்வை ஆணையம் நடத்தவுள்ளது. மொத்தம் 2536 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நாட்டில் அனைத்து பகுதிகளில் உள்ளவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.
பணி, வயது வரம்பு, தேவையான கல்வித் தகுதி, கட்டணம், தேர்வுத் திட்டம் ஆகியவை குறித்த விரிவான விவரங்கள் பணியாளர் சேர்க்கை அறிவிக்கையில் இடம்பெற்றுள்ளது.12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இத்தேர்வுக்கு விண்ணாப்பிக்கலாம்.



