மனதை மயக்கும் ஹட்லு நீர்வீழ்ச்சி!
- நமது நிருபர் -: ஹாசன் மாவட்டம், சக்லேஷ்புரா தாலுகாவில், பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. மலைகள், அடர்ந்த
ஹாசன் மாவட்டம், சக்லேஷ்புரா தாலுகாவில், பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. மலைகள், அடர்ந்த வனங்கள், புராதன கோவில்கள் என, சுற்றுலா பயணியர் விரும்பும் அனைத்தும் இங்குள்ளன. அதே போல, ஹட்லு அருவியும் சுற்றுலா பயணியரை, சுண்டி இழுக்கிறது.
சக்லேஷ்புரா அருகில், ஹட்லு அருவி மேற்கு தொடர்ச்சியின், அடர்த்தியான வனப்பகுதி நடுவே உள்ளது. இதை பார்க்க விரும்பினால், அடர்ந்த வனம், காபி தோட்டங்களை கடந்து செல்ல வேண்டும்.
இரண்டு புறமும் பசுமையான காட்சிகளை ரசித்தபடி நடந்து செல்வது, புதிய அனுபவமாக இருக்கும். மழை காலத்தில் ரசிக்க வேண்டிய இடமாகும்.

