மகேஷ் பாபு, சமந்தா உள்ளிட்ட திரையுலக பிரபலங்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
ஐதராபாத்,தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியான எஸ்ஐஆர்(SIR)-ன் ஒரு பகுதியாக, திரையுலகைச் சேர்ந்த பல முக்கிய ப
தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியான எஸ்ஐஆர்(SIR)-ன் ஒரு பகுதியாக, திரையுலகைச் சேர்ந்த பல முக்கிய பிரபலங்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஐதராபாத்தைச் சேர்ந்த இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி, நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, மகேஷ் பாபு, வெங்கடேஷ், நடிகை சமந்தா ரூத் பிரபு உள்ளிட்ட திரையுலக பிரபலங்களுக்கும், பிரபல கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லட்சுமணுக்கும் தேர்தல் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள சில விவரங்களில் எழுத்துப் பிழைகள் இருப்பது, பெற்றோர் பெயர்களில் முரண்பாடுகள் காணப்படுவது உள்ளிட்ட காரணங்களால் இந்த நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




