ஏர் இந்தியா நிர்வாகத்தில் கூடுதல் அதிகாரம் கேட்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
புதுடெல்லி,ரூ.12 ஆயிரம் கோடி புதிய நிதிக்கு பதிலாக ஏர் இந்தியா நிர்வாகத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூடுதல் அதிகாரம் கேட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஸ்
டாடா குழுமமும், சிங்கப்பூர் ஏர்லைன்சும் இணைந்து 2013-ல் 'விஸ்தாரா' என்ற விமான நிறுவனத்தைத் தொடங்கின. அதில் சிங்கப்பூர் ஏர்லைன்சிடம் 49 சதவீத பங்குகள் இருந்தன. கடந்த 2022-ம் ஆண்டில் இந்திய அரசிடமிருந்து ஏர் இந்தியா நிறுவனத்தின் முழு நிர்வாகக் கட்டுப்பாட்டையும் டாடா குழுமம் கைப்பற்றியது. ரூ.18 ஆயிரம் கோடியில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
விஸ்தாரா நிறுவனம் ஏர் இந்தியாவுடன் கடந்த 2024-ல் முழுமையாக இணைக்கப்பட்டது. இந்த இணைப்பின் மூலம், விஸ்தாராவில் தனக்கிருந்த 49 சதவீத பங்கை ஏர் இந்தியாவின் 25.1 சதவீத பங்காக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மாற்றிக்கொண்டது.
இந்த இணைப்பின் போது, புதிய பெரிய ஏர் இந்தியா நிறுவனத்தில் தனது 25.1 சதவீத பங்கை உறுதிப்படுத்திக்கொள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முதலில் ரூ.2 ஆயிரம் கோடியும், பின்னர் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளுக்காக ரூ.6 ஆயிரத்து 333 கோடியையும் முதலீடு செய்துள்ளது. கடந்த நிதி ஆண்டு முடிவில் ஏர் இந்தியா நிறுவனம் ரூ.19 ஆயிரம் கோடி நஷ்டத்தை சந்தித்தது.

