2 நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து: எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.
விதிமுறைகளை மீறியதற்காக 'கைலாஷ் ஃபார்முலேஷன்' மற்றும் 'சானிக்யூர் வாட்டர் ப்ராஜெக்ட்' ஆகிய நிறுவனங்களின் உரிமங்களை எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. இடைநீக்கம் செய்தது.
புதுதில்லி: சுகாதாரம் மற்றும் விதிமுறைகளை மீறியதற்காக, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 'கைலாஷ் ஃபார்முலேஷன்' மற்றும் 'சானிக்யூர் வாட்டர் ப்ராஜெக்ட்' ஆகிய நிறுவனங்களின் உரிமங்களை உணவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையமான எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. இடைநீக்கம் செய்தது.
இது குறித்து ஆய்வு மேற்கொண்ட போது, சுகாதாரம், தூய்மை மற்றும் விதிமுறை மீறல்கள் கண்டறியப்பட்டதால், இரு நிறுவனங்களின் உரிமங்களும் இடைநீக்கம் செய்ததாக ஆணையம் தெரிவித்தது.

