ஆப்பிள் ரசிகர்களே! ₹3 லட்சத்தில் Foldable iPhone முதல் 18 Pro Max வரை! - என்ன ஸ்பெஷல்?
பெரிய திரையில் ஒரே நேரத்தில் இரண்டு Apps-ஐ இயக்கும் Split View, App Pairing உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. இந்த ஆண்டு இறுதியில் Apple Pencil support-ம் வருகிறது.
ஆப்பிள் ரசிகர்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்த அந்த தருணம் வந்துவிட்டது. iPhone Duo என்ற தனது முதல் Foldable iPhone-ஐ ஆப்பிள் அறிமுகப்படுத்தியுள்ளது. செப்டம்பர் 9 அன்று நடந்த ‘Surprise and Shine’ Apple Event-ல் iPhone Duo-வுடன், iPhone 18 Pro, iPhone 18 Pro Max, Apple Watch Series 12, Apple Watch Ultra 4 மற்றும் AirPods 5 ஆகியவையும் அறிமுகமாகின.
இதோ... இந்த புதிய iPhone-களில் என்ன ஸ்பெஷல்?
