வீட்டில் தனியாக வசித்த பெண்ணை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை
ராணிப்பேட்டை,திமிரி அடுத்த தாமரைப்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு, முகமூடி கொள்ளையர்கள் நகை, பணத்தை கொள்ளைய டித்து சென்றனர்.முகமூடி கொள்
திமிரி அடுத்த தாமரைப்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு, முகமூடி கொள்ளையர்கள் நகை, பணத்தை கொள்ளைய டித்து சென்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி அடுத்த தாமரைப்பாக்கத்தில் வசிப்பவர் சுப்பிரமணி மனைவி அமுதா (வயது 45). சுப்பிரமணி இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லாததால் அமுதா தனியாக வசித்து வந்தார். விவசாய கூலி வேலை செய்து கொண்டு, கறவை மாடுகளை வளர்த்து வருகிறார்.
வீட்டின் பின்புறம் மாடுகளை கட்டிவைத்திருப்பதால் அமுதா இரவில் பின்பக்க கதவை திறந்து வைத்திருப்பது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அமுதா வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். 10.30 மணி அளவில் 25 வயது மதிக்கத்தக்க 3 நபர்கள் முகமூடி, கையுறை அணிந்து கொண்டு பின்வாசல் வழியாக அமுதாவின் வீட்டுக்குள் புகுந்தனர்.
