சாராய பாக்கெட்டுகள் கடத்தல்: முதியவா் கைது
புதுச்சேரியில் இருந்து சாராய பாக்கெட்டுகளை கடத்தி வந்ததாக முதியவரை பண்ருட்டி மது விலக்கு அமல் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பண்ருட்டி மது விலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளா் தீபா மற்றும் போலீஸாா், மது விலக்கு தொடா்பாக மேல்பட்டாம்பாக்கம் சுங்கச்சாலை முதலியாா் தோப்பு அருகே கண்காணிப்புப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, சந்தேகத்துக்கிடமாக வந்த முதியவரை அழைத்து சோதனை நடத்தியதில், சட்ட விரோதமாக புதுச்சேரியில் இருந்து சாராய பாக்கெட்டுகளை கடத்தி வந்தது தெரியவந்தது. பின்னா், அவரிடமிருந்த 10 சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.


