திண்டிவனத்தில் ரூ.27.51 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பஸ் நிலையம் வெறிச்சோடியது!அரசு மற்றும் தனியார் பஸ்கள் தொடர்ந்து புறக்கணித்து வரும் அவலம்
திண்டிவனம்: திண்டிவனத்தில் நகராட்சி சார்பில் ரூ.27.51 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பஸ் நிலையத்திற்கு பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பஸ்கள் வருவதை நிறுத்திக்கொண்டதால், பஸ் நிலையம் வெறிச்சோடி கிடக்கின்றது. பஸ்கள் வரத்து குறைந்துள்ளதால் நகராட்சி கடைகள் திறக்கப்படாமல் மூடியே கிடக்கின்றது.
நகர பொதுமக்களின் நீண்ட நாளைய கோரிக்கையாக திண்டிவனத்தில் நகராட்சி சார்பில் புதிய பஸ் நிலையம் கட்ட வேண்டும் என்பதுதான். இந்த கோரிக்கைக்கு கடந்த தி.மு.க.,ஆட்சியின் தீர்வு காணப்பட்டது. திண்டிவனம்-சென்னை சாலையில் ரூ.27.51 கோடி செலவில் 6 ஏக்கர் பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் புதிய நகராட்சி பஸ் நிலையம் கடந்த பிப்.,4 ம் தேதி அப்போதைய முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
பஸ் நிலையத்தில் நகராட்சி சார்பில் 67 கடைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த கடைகளை போட்டி போட்டிக்கொண்டு கவுன்சிலர்களின் ஆதரவாளர்கள் ரூ.3 லட்சம் வரை வைப்பு தொகை கட்டியும், மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் வரை வாடகைக்கு எடுத்தனர்.

